தாமரை
"ஸ்ஸ், அப்பாடா!!!" , என்று வியர்வை வழிந்த முகத்தை துடைத்துக் கொண்டு பேருந்தில் ஏறி அமர்ந்தேன் நான். "அப்பா என்ன கூட்டம் பாரு சகலை, வாரம் இறுதினா போதும், கோயம்பேடு குவிஞ்சிபுடுதே, இதை பார்த்தால், இங்கே இருக்குறவங்க முக்கால் வாசி பேர், வெளியூரில் இருந்து பொழைக்க வந்த நம்மள மாதிரி பயலுவ தான் போல , இந்த மாதிரி எல்லா ஊர் பயலுவலையும் கொஞ்சம் கொஞ்சம் வச்சிகிட்டு, இருக்குறதிலே பெருமையான, பெரிய ஊரு மெட்ராஸ்னு பவுசு காட்டுறாங்க", "அதை சொல்லு சகலை , நம்ம ஊரு காவிரி ஆத்து தண்ணி முன்னால் இந்த மெரினா எடுபடுமா", கறிவேப்பிலையை வெலை குடுத்து வாங்குறாய்ங்க", நம்ம ஊரில் கொல்லைக்கு கொல்லை கிடக்கும், இங்க ஒரு கொத்து அம்பது ரூவாயாம்ல!!!!", "ஹே அப்பு, செத்த இருங்கப்ப்பா...உன் ஊரில் கறிவேப்பிலை கொட்டிக் கிடக்கு, சரிதான், உன் ஊரு அம்புட்டு பெரிய ஊரு தான், அப்புறம் எதுக்குப்பு இங்கே வந்த?, உன் ஊரில் ஆயிரம் கொட்டிக் கிடந்தாலும், பொழைப்புக்கு இங்க தானே வர மாதிரி இருக்கு, இங்கே உனக்கு குடுக்குற சம்பளத்தின் அளவ அதே வேலைக்கு உன் ஊரில் நீ வாங்கிட முடியுமாப்பு, ...