Posts

Showing posts from June, 2021

மஞ்சள் ரோஜா

Image
"நீ வருவாய் என நீ வரும் பாதையில்.... விழி வைத்து காத்து  இருக்கிறோம்.. நானும் என்னுடைய காதலும்...", காலையில் பேருந்து நிலையத்தில் பைரவி எப்போது வருவாள் என்று தவிப்புடன் வழி மேல் விழி வைத்து காத்துக் கொண்டு இருந்த போது விக்ரம் மனம் எழுதிய கவிதையை  டைரியில் கவிதை எழுதி கொண்டு இருந்தான். முன்பக்கம் டைரியின் பக்கங்களை புரட்டினான், "நான் வைத்த செடியில் இன்று பூத்த மஞ்சள் நிற ரோஜாவை காணவில்லை... அட! அதோ நடந்து வருகிறதே..." என்று நேற்று பைரவி மஞ்சள் நிற சுடிதார் அணிந்து சென்ற போது அவன் மனம் எழுதிய கவிதை. அதற்கு மேல் அவளுடைய நினைவை அவனால் தாங்க முடிய வில்லை.பைரவி.....!!!! அழகான பெயர்...உன்னை போலவே... என்று  எண்ணிக் கொண்டு, எழுந்து மொட்டை மாடியில் சுவரில் கையை ஊன்றி கொண்டு எதிரில் இருந்த வீட்டின் மாடியை பார்த்தான். அங்கு பேச்சும் சிரிப்பும் களை கட்டி கொண்டு இருந்தது. திரும்பவும் டைரியை எடுத்தவன்,  "ஏழு ஸ்வரங்களாக உன் சிரிப்பு சத்தம் ஒலிக்க,  ஆயிரம் பேர் சுற்றி இருந்தும்,  உன் சிரிப்பு சத்தத்தை மட்டும்....  என் மனம் கண்டுபிடித்த மாயம் என்ன?" என்று அவன் எழுதி முட...

குமரி

Image
  20,000 ஆண்டுகளுக்கு முன்பு.... அன்று 1350.. . கடற்காற்று மெலிதாக வீசி அந்த கடலும் கடல் சார்ந்த பகுதியான நெய்தல் நிலத்தை குளிர்வித்து கொண்டு இருந்தது. தாழையின் இதழ்கள் மணத்தில் மயங்கி, கீற்றாக வானத்தில் தெரிகின்ற வெண்ணிலாவின் ஒளியில் கருநாகம் தன் இணையுடன் இணையும் நேரம் அது, தூரத்தில் எங்கோ குதிரை குளம்பொலிகள் கேட்டது, அதில் திடகாத்திரமான உடலுடன், முகத்தில் ஒரு வித கம்பீரத்துடன் புரவியை செலுத்திக் கொண்டு இருந்தான், காற்றில் பறந்த அவன் குழல் முகத்தில் பட்டு அது அவனுக்கு ஒரு வசீகர அழகு தந்தது, கண்கள் இரண்டும் பார்ப்பவர், எதிரில் இருப்பவர் விழியால் துளையிட்டு அவர்கள் மனதில் இருப்பதை கண்டு அறிந்துக் கொள்ள முயற்சிப்பது போன்ற பார்வை கொண்டு இருந்தது. அவன் ஒரு போர் வீரன் என்பதை உணர்த்தும் வகையில் அவன் புஜங்களில் போர்த் தழும்புகள், இத்தனையும் மீறி அவன் முகத்தில் ஒரு வித பதற்றமும், கவலையும் சேர்ந்து இருந்தது. இடையில் வாளுடன், புரவியை செலுத்திக் கொண்டிருந்த அவன் பாண்டிய நாட்டை சேர்ந்தவன் என்பதை உணர்த்தும் வகையில், அவன் ஆடையில், மீன் லச்சினை முத்திரை பதிக்கப்பட்டு இருந்தது, அவன் இப்போது கடற...